Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ISIS தீவிரவாத தலைவர் அல் பக்தாதி இறந்தது எப்படி ? அமெரிக்க ராணுவம் வீடியோ வெளியீடு

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (17:05 IST)
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுறுத்தி,  அப்பாவி மக்களை கொன்று குவித்து  வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி சிரியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து, கடந்த 26 ஆம் தேதி, சிரியாவில் ஒரு சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த ஐஎஸ். ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிதை அமெரிக்க  ராணுவத்தினர் நெருங்கிய போது, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அவர்  தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், ஐஎஸ்.ஐஎஸ், அமைப்பில் அமெரிக்க உளவியல் ஒருவர் செயல்பட்டு வந்ததாகவும், அவர்தான் பாக்தாதி பதுங்கி இருக்கும் இட்டத்தை சரியாக அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில் ஐஎஸ்.ஐஎஸ்,தலைவர் தலைவர் அல் பக்தாதி மரணத்திற்கு காரணமான அதிரடி தாக்குதல்கள் குறித்த வீடியோவை அமெரிக்க   ராணுவத் தலைமையகம் பெண்டகன் வெளியிட்டுள்ளது.
 
மேலும், கறுப்பு - வெள்ளைக் காட்சிகளுடன் அந்த வீடியோ உள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து குறிப்பிடும்போது: ’சுரங்கப்பாதை வழியாக பக்தாதி கதறி அழுதபடி, தன் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஓடி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார் . அவரது குழந்தைகளும் இறந்தனர் ‘என தெரிவித்திருந்தார்.
தற்போது,  அமெரிக்க ராணுவ உயரதிகாரி கென்னத் மெக்கன்சியும் இதையே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments