Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் மிக உயரமான ஏரி இது தான் தெரியுமா??

உலகின் மிக உயரமான ஏரி இது தான் தெரியுமா??
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:33 IST)
உலகின் மிகப்பெரிய ஏரி என்ற சாதனை பட்டியலில் நேபாளில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரி இடம்பெற உள்ளது.

நேபாள் நாட்டில் மனாங் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் திலிச்சோ என்ற ஏரி உள்ளது. இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரியாகும்.
இந்த ஏரி 4 கி.மீ. நீளம், 1.2 கி.மீ. அகலம் கொண்டது. சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையேறும் குழுவினரால், சிங்கர்கர்கா பகுதியில் கஜின் சாரா என்னும் ஏரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 மீட்டர் உயரத்தில் உள்ளதாக அறியப்படுகிறது.

இந்த ஏரி சுமார் 1.5 கிமீ நீளம், 600 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து 5200 மீட்டர் உயரத்தில் இருப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ல ஏரி என்ற புதிய சாதனையை படைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோதியோடு காட்டில் பயணித்தது குறித்து என்ன சொல்கிறார் பியர் கிரில்ஸ்?