சென்னையின் முக்கிய அகுதியில் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவிற்கு உள்ளது என தெரிந்துக்கொள்ளுங்கள்.
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 7 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீரை பொருத்தவரை கடந்த 7 ஆண்டுகளில் முன்பு இருந்த நிலத்தடி நீர் மட்டம் இப்போது பெரிய அளவில் சரிந்துவிட்டது. இதன் விளைவாக கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் 3.89 மீட்டரில் இருந்த நீர் மட்டம் 6.75 ஆகவும், பெருங்குடியில் 4.35 மீட்டரில் இருந்து 6.96 ஆகவும், ராயபுரத்தில் 4.26 மீட்டரில் இருந்து 7.65 ஆகவும், திருவெற்றியூரில் 3.46 மீட்டராக இருந்த நீர் மட்டம் 4.93 மீட்டராக சரிந்துள்ளது.
மேலும், மணலியில் 2.81ல் இருந்து 5.14 ஆகவும், மாதவரத்தில் 3.85 மீட்டரில் இருந்து 6.42 ஆகவும், தண்டையார்பேட்டையில 3.84 இருந்து 7.51 ஆகவும், திருவிக நகரில் 2.71 இருந்து 7.23 ஆகவும், அம்பத்தூரில் 4.71 இருந்து 7.98 ஆகவும் உள்ளது.
அதேபோல், அண்ணா நகரில் 3.82 மீட்டரில் இருந்து 6.44 ஆகவும், தேனாம்பேட்டையில் 3.77ல் இருந்து 6.49 ஆகவும், கோடம்பாக்கத்தில் 4.01ல் இருந்து 7.01ஆகவும், வளசரவாக்கத்தில் 3.88 மீட்டர் என்ற அளவில் இருந்த நிலத்தடி நீர் 6.92 என்ற அளவிற்கு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.