அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உயர் திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு $1,00,000 (சுமார் ₹88 லட்சம்) கட்டணம் விதித்ததை எதிர்த்து, தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் மத குழுக்கள் இணைந்து வழக்கு தொடுத்துள்ளன.
சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், H-1B விசா திட்டத்தை உருவாக்கிய நாடாளுமன்ற சட்டத்தை மீறி, கட்டணத்தை உயர்த்த டிரம்புக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள $2,000 - $5,000 கட்டணத்துக்கு பதிலாக $1,00,000 கூடுதல் கட்டணம் என்பது, வெளிநாட்டு திறமைகளைப் பணியமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டிரம்ப் நிர்வாகம் குறைந்த ஊதிய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டில் இருந்து வருவது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும், அமெரிக்கர்கள் அறிவியல் துறையில் தொழில் செய்வதைத் தடுப்பதாகவும் வாதிடுகிறது.
இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.