Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ளிக் டாய்லெட்டில் வைபை, ஏடிஎம், டிவி வசதி: ஆச்சரியப்படுத்தும் சீனா

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:16 IST)
நம்மூர் பப்ளிக் டாய்லெட்டுக்கள் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சீனாவில் நவீன வசதிகளுடன் வைபை, ஏடிஎம், டிவி வசதியுடன் கூடிய பப்ளிக் டாய்லெட்டுக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2015ஆம் ஆண்டு நவீன டாய்லெட்டுக்கள் குறித்த திட்டமிட்டுள்ள நிலையில் தற்போதுதான் அவை நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த டாய்லெட்டில் பல்வேறு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் டாய்லெட்டிலேயே இருந்துவிடவும் முடியாது. ஏனெனில் சரியாக பத்து நிமிடத்தில் நீங்கள் டாய்லெட்டில் இருந்து வெளியே வருமாறு அலாரம் ஒன்று அடிக்கும்.
 
டாய்லெட்டின் உள்ளே போன் சார்ஜர், ஏடிஎம், டிவி, வைபை, உள்பட பல்வேறு வசதிகள் உண்டு. சீனாவுக்கு சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த நவீன டாய்லெட் வசதியை சீன அரசு செய்துள்ளது. இந்த டாய்லெட்டுக்கள் தற்போது இரண்டு நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் கிராமங்கள் உள்பட பல இடங்களில் இந்த வசதி செய்து தரப்படும் என்றும் சீன அதிபர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments