துருக்கியில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியில் உள்ள தென்மேற்கு மாகாணமான ஈஸ்வர்ட்டா என்ற பகுதியில், ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது எதிர்பாராத வகையில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
இதில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், இன்னொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும், அந்த ஹெலிகாப்டரில் தான் ஐந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து இரண்டாக உடைந்தது என்றும் அங்கு உள்ள செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.