Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு போஸ்தான்..! ஹாலிவுட்டில் படமாகும் ‘துருக்கி மேன்’ வாழ்க்கை கதை? வைரலாகும் மீம்ஸ்!

Advertiesment
yusuf dikec

Prasanth Karthick

, ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (11:48 IST)

பரபரப்பாக நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற துருக்கி வீரர்தான் தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறார்.

 

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கடந்த சில நாட்கள் முன்னதாக துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் பல நாட்டு வீரர்களும் கலந்து கொண்ட நிலையில் துருக்கி நாட்டு வீரர் யூசுப் டிகெக் என்பவரும் கலந்து கொண்டார். கண்களுக்கு குறி வைக்கும் லென்ஸ் போன்ற எந்த விதமான உபகரணங்களும் இன்றி ஒரு டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட் சகிதம் வந்து சர்வ சாதாரணமாக இலக்கை சுட்டு வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார் யூசுப்.

 

 

அதுமுதலாக சோசியல் மீடியா முழுவதும் அவரது புகைப்படம் மீம் மெட்டீரியலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவரை துருக்கி மேன், துருக்கியின் ஜான் விக் என்று பலரும் கூறி வருகின்றனர். அதேசமயம் அவர் குறித்த கதைகளும் ஏராளமாக உலாவத் தொடங்கியுள்ளன. அவர் ஒரு சாதாரண மெக்கானிக் என்றும், தனது மனைவி தன்னை விவாகரத்து செய்த நிலையில் அவர் முன்னால் தான் பெரிய ஆளாக மாறி காட்ட் வேண்டும் என அவர் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் அதை மறுத்துள்ள சிலர் அவர் துருக்கி ராணுவத்தில் சார்ஜண்டாக பணிபுரிந்தவர் என்று கூறுகின்றனர்.

 

 

இதில் எது உண்மை என்று தெரியாத நிலையில் இவரை வைத்து அனிமே தொடர் எடுக்க வேண்டும், திரைப்படம் எடுக்க வேண்டும் என பலரும் பேசி வருவதோடு பல மீம்ஸ்களையும், ஃபேன் மேட் பட போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர். இவருக்கு கிடைத்துள்ள புகழால் அவரை பற்றிய படம் விரைவில் எடுக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என பேசிக் கொள்ளப்படுகிறது. 

 

இணையத்தை கலக்கும் துருக்கி மேன் யூசுப் டிகெக்கின் வைரல் மீம்ஸ் சில..







Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ், ரெஸ்லிங் எல்லாமே ஸ்க்ரிப்ட்டு! உண்மையை புட்டு புட்டு வைத்த க்ரேட் காளி!