கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 300க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இன்று அதிகாலை ஹைதி பகுதியில் 7.2 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த தீவில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் ஹைதி தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பதட்டத்துடன் வீடுகளில் இருந்து விழுவதை பார்த்து கொண்டு இருக்கும் காட்சிகள் வீடியோக்களாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் நடந்த பகுதிகளில் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது