வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் லடாக்கில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கும் மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வடக்கு காரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளிவில் ரிக்டரில் 4.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுபோல யூனியன் பிரதேசமான லடாக்கிலும் அதிகாலை 5 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு பகுதிகளிலும் மிதமான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.