Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 நிமிடங்கள் இதயம் துடிப்பது நின்றும் உயிர் பிழைத்த இளம்பெண்.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!

Advertiesment
40 நிமிடங்கள் இதயம் துடிப்பது நின்றும் உயிர் பிழைத்த இளம்பெண்.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (12:50 IST)
லண்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 40 நிமிடங்கள் இதயம் துடிப்பது நின்ற போதிலும் அதன் பிறகு அவர் திடீரென உயிர் பிழைத்த அதிசயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
லண்டனை சேர்ந்த கிறிஸ்டி என்ற இளம் பெண் மூன்று குழந்தைகளுக்கு தாயானவர். இவருக்கு அடிக்கடி மாரடைப்பு வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு வந்து உட்கார்ந்து நிலையிலேயே இருந்தார். 
 
இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை சோதனை செய்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய இதயமும் நின்று விட்டது என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென நாற்பது நிமிடங்கள் கழித்து அவருக்கு மீண்டும் இதய துடைப்பு ஏற்பட்டது. 
 
அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் திடீரென அவர் உயிர் பிழைத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவர் தான் உயிரற்ற உடலாக இருந்தபோது இருந்த அனுபவம் குறித்து விளக்கியுள்ளார்.
 
தன்னைத்தானே அவர் பார்த்ததாகவும்  தன் தோலில் விசித்திரமான வடிவங்களை பார்த்ததாகவும் அவர் தனது மரண அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.  இதயத்துடிப்பு நின்றபோதிலும் அவருடைய நுரையீரல் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஸ்கேன் செய்த போது புரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி உத்தரவு..!