அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜனவரி 11ஆம் தேதி வரை காவல் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு டாக்டர் இடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதனை அடுத்து அவருடைய ஜாமின் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்த நிலையில் அடுத்த கட்டமாக மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்றுடன் அவருடைய காவல் நீடிப்பு முடிவடைவதை அடுத்து காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவரை ஜனவரி 11-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வரைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது