அமெரிக்காவில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதை மறைத்து பலருடன் பாலியல் தொடர்பு கொண்டு எய்ட்ஸ் நோயை வேண்டுமென்றே பரப்ப முயற்சி செய்தற்காக இளைஞர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த 34 வயதான இளைஞர் அலெக்சாண்டர் லூயி இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர். அடா கவுண்டியைச் சேர்ந்த ஒரு துப்பறிவு அதிகாரி ஒரு 15 வயது சிறுவன் போல அலெக்சாண்டர் லூயியுடன் ஆன்னைலின் பேசியுள்ளார். அப்போது லூயி தொடர்ந்து எய்ட்ஸை பரப்ப முயற்சி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
லூயியின் ஆன்லைனில் தன்னுடன் பேசிய சிறுவனை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அடா கவுண்டி போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையைத் தொடர்ந்தபோது, எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்பு உள்ள லூயி, மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மற்றவர்களுக்கு எச்.ஐ.வி. பரவும் வகையில் ஆண்கள் மற்றும் டீன் ஏஜ் பையன்களுடன் வேண்டுமென்றே உடலுறவு வைத்திருக்கிறார் என்றும் கண்டுபிடித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதைப் பற்றிச் சொல்லாமல் மறைத்துள்ளார். 16 வயது சிறுவன் முதல் 30 முதல் 50 வெவ்வேறு ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவரே போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப் பின் அடா கவுண்டி மாவட்ட நீதிபதி டெரிக் ஓ'நீல்அலெக்சாண்டர் லூயிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.