Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக்கலைஞர்கள்

Webdunia
புதன், 17 மே 2023 (23:03 IST)
இங்கிலாந்து  நாட்டின் புதிய மன்னராக சார்லஸ் கடந்த மே  6 ஆம் தேதி கிரீடம் மற்றும் செங்கோல் தாங்கி பதவியேற்றுக் கொண்டார். உலகின் முக்கியதலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு மன்னரை வாழ்த்தினர்.

இந்த நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அங்குப் பல நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில்,  நியூயார்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.

அவர்களை புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டதாகவும் அவர்களை புகைப்படம் எடுக்கத் துரத்தியதாகவும்,  இதனால், இளவரசார் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

புகைப்படக்கலைஞர்கள் ஹாரி மற்றும் மேகன் தம்பதியை சுமார் 2 மணி நேரம் காரில் துரத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 1997 ஆம் ஆண்டு ஹாரியின் தாயார் டயானாவை புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுக்க காரை துரத்தியபோது, அவர் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments