Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடு...

Advertiesment
இங்கிலாந்து  மன்னர் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடு...
, வெள்ளி, 5 மே 2023 (22:25 IST)
இங்கிலாந்து  நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் எலிசபெத் –II. இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி  காலமானார்.

இவரது மறைவை அடுத்து,,  இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை  ஏற்கனவே அறிவித்தது.

இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிசூட்டு விழாவுக்காக  இங்கிலாந்து அரசர்கள் 700 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகி வருகிறது.

இந்த  நிகழ்ச்சியை முன்னிட்டு 8 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளன.

மேலும்,   நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபாதி ஜெகதீப் தங்கர் இன்று விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம்