Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

Mahendran
திங்கள், 28 ஜூலை 2025 (11:26 IST)
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மனைவி, போலி பாஸ்போர்ட் மூலம் துருக்கிக்கு தப்பி சென்று அங்கு மறுமணம் செய்து கொண்டதாகக்கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் என்பவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி சமர் முகமது அபு என்பவர் வேறொரு பெண்ணின் பாஸ்போர்ட் மூலமாக தனது குழந்தைகளுடன் துருக்கி சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும், அவருக்கு தேவையான உதவிகளை ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
துருக்கியில் அவர் தனது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலையில் சமர் முகமது அபு தற்போது அங்கேயே மறுமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் யாரை மறுமணம் செய்து கொண்டார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments