இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா என்பவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு க்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்றும், 4,250 காயம் அடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில் நேற்றிரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா உயிரிழந்ததாக தெரிகிறாது.
ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா மறைவு ஹமாஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிராது.