கின்னஸ் சாதனை முயற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் வசித்து வந்தவர் அலெக்ஸ் ஹார்வி(28). இவர் அடிக்கடி பைக் சாகச நிகழ்ச்சிகள் செய்து பார்போரை பிரமிப்பில் ஆழ்த்துவார்.
இந்நிலையில் இன்று அவர் வாஷிங்டன் நகரில் உள்ள மோசஸ் ஏரி அருகில் பைக் சாகம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தூரத்தில் இருந்து வேகமாகப் பறந்து வந்த அவர், மணல் குன்று மீது மோதினார். இந்த விபத்தில் அவரது தலைக்கவசம் தனியெ சென்றது. தலையில் பலத்த காயம் பட்ட அவரை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலெக்சின் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.