விண்வெளியில் சீனா தனக்கென புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ள நிலையில் மூன்று சீன வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பங்கேற்பில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையமே இதுவரையிலான ஒரேயொரு விண்வெளி மையமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையம் காலவதி காலத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் சீனா தனக்கென விண்வெளியில் தனியாக விண்வெளி மையம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக புதிய விண்வெளி மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று சீன விண்வெளி வீரர்கள் ஷென்சூ12 விண்கலம் மூலமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா, அங்கு அவர்கள் மூன்று மாதம் தங்கியிருந்து விண்வெளி மைய கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.