Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

Advertiesment
Ghiblify

Prasanth Karthick

, திங்கள், 31 மார்ச் 2025 (08:39 IST)

சமீபத்தில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்த Ghiblify ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில் இதனால் தற்போது சாட்ஜிபிடியே சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

 

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ மென்பொருளாக உள்ளது. பலரும் கோப்புகள் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர்.

 

சமீபத்தில் சாட்ஜிபிடி Ghiblify என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஜப்பானின் புகழ்பெற்ற அனிமே பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிப்ளியின் அனிமே திரைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி Ghiblify செய்து கேட்டால், அது அந்த அனிமே பாணியிலேயே போட்டோக்களை மாற்றி தருகிறது.

 

இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனதால் தற்போது ஏராளமான இணையவாசிகள் சாட்ஜிபிடிக்குள் புகுந்து தங்கள் புகைப்படங்களை கிப்ளிஃபை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டுள்ளது. ஏராளமான பயனாளர்கள் இந்த ஃபில்டரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்துள்ளதுடன், ப்லருக்கு போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆவதும் இல்லை.

 

இதை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சாட்ஜிபிடியின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், போட்டோக்களை ஏராளமானோர் கிப்ளிஃபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆவதாகவும், ஜிபியு உருகுவதாகவும் கூறி கிப்ளிஃபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என பயனாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!