Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் குரல்களுக்கு மதிப்பில்லை.. சுந்தர் பிச்சைக்கு கூகுள் தொழிலாளர்கள் கடிதம்..!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (10:06 IST)
எங்கள் குரல்களுக்கு மதிப்பில்லை என்று கூகுள் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் தற்போது இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கையும் எடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூகுள் பணியாளர்கள் இணைந்து சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர்
 
அதில் புதிதாக ஆட்களை எடுப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் கூகுள் பணியாளர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க விடுமுறைகள் விடப்பட வேண்டும் என்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துள்ளனர். 
 
ஆனால் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் தங்களது குரல்கள் போதுமான அளவுக்கு கருத்தில் கொள்வதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் ஒன்றாக இணைந்து வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானுமே ஸ்டாலின் சாரை அங்கிள்னு கூப்பிடுவேன்.. விஜய் தப்பா பேசலை..! - கே.எஸ்.ரவிக்குமார்!

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விரைந்த காவல்துறை.. பரபரப்பு தகவல்..!

வரிகளும், தடைகளும் இந்தியாவை பாதிக்காது: அன்றே சொன்னார் வாஜ்பாய்..!

வரிவிலக்கை அறிவித்த மத்திய அரசு! அமெரிக்கா என்ன பண்ணாலும் அசர மாட்டோம்! - ஆடை ஏற்றுமதியில் ட்விஸ்ட்!

அமெரிக்காவின் வரியால் பாதித்த திருப்பூர்! நிவாரணம் வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments