Publish Date: Sun, 05 Mar 2023 (12:19 IST)
Updated Date: Sun, 05 Mar 2023 (12:22 IST)
சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்.. பேருந்து சேவை முடங்குமா?
சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் காரணமாக நாளை பேருந்து சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதை அடுத்து அரசு பேருந்துகளை தனியார் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது.
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் என்ற முறையில் 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
நாளை அரசு பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளதால் நாளை பேருந்து சேவை முடங்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.