Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2020 முதல் செயல் இழக்கின்றதா கூகுளின் முக்கிய அம்சம்? பயனாளிகள் அதிர்ச்சி

2020 முதல் செயல் இழக்கின்றதா கூகுளின் முக்கிய அம்சம்? பயனாளிகள் அதிர்ச்சி
, ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (15:29 IST)
கூகுள் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பல வசதிகளை தனது பயனாளிகளுக்கு செய்து வருகின்றது. இருப்பினும் ஒருசில வசதிகளை அவ்வப்போது கூகுள் நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளின் 'ஆர்குட்' உள்பட பல வசதிகள் நிறுத்தப்பட்ட நிலையில் விரைவில் கூகுள் யூஆர்.எல் ஷார்ட்னர் வசதியும் நிறுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் வரும் 2020ஆம் ஆண்டு முதல் கூகுள் தகவல் தொடர்பு செயலியான கூகுள் ஹேங் அவுட் மூடப்படும் என்று  என்று தெரிகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஹேங் அவுட் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது. இந்த அப்ளிகேசனில் ஆரம்பத்தில் மெசேஜ், வீடியோ சாட், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பல வசதிகள் இருந்தது. ஆனால் அதில் பல்வேறு அம்சங்களை குறைக்க தொடங்கிய கூகுள் சமீபத்தில் எஸ்.எம்.எஸ். வசதியையும் நிறுத்திவிட்டது.

webdunia
இந்த நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய சாட்டிங் செயலியாக இருக்கும் இந்த ஹேங் அவுட் வ்சதி 2020-ல் முடப்படவுள்ளதாக கூகுள் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவாரவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மணி நேரம், 12 நாள் எது பெரிசு? கமலிடம் கேள்வி கேட்ட ஹெச்.ராஜா