Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்துவிட்டது Gemini Live.. வேற லெவலில் யோசித்த Google.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் AI chatbot..!

Advertiesment
AI

Siva

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (07:12 IST)
Google தனது புதிய அம்சமான Gemini Live-ஐ அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த வசதியில், உங்கள் கைபேசியின் கேமராவை பயன்படுத்தி சுற்றுப்புறங்களை நேரடியாகக் கவனித்து கேள்வி கேட்டால் பதிலளிக்கும் திறன் கொண்ட AI உதவியாளராக மாறியுள்ளது.
 
இது தற்போது Pixel 9 மற்றும் Samsung Galaxy S25 போன்களில் மட்டுமே செயல்படுகிறது. ஒரு பட்டனை அழுத்தும்போது live video தொடங்கும்; அதற்குப்பின், கேமராவில் தெரிகின்ற பொருள்களைப் பற்றி நேரடியாக கேள்விகள் கேட்கலாம். உதாரணமாக, ஒரு பயனர் ஒரு உணவு பொருளை காண்பித்து, அதிலிருக்கும் வைட்டமின்கள், நன்மை, தீமை குறித்து AI-யிடம் கேட்கலாம்.
 
மேலும், ஸ்க்ரீனை பகிர்ந்து ஷாப்பிங் தளங்களை திறந்து, தயாரிப்புகளை ஒப்பிடச் சொல்லலாம். சிறந்த மாடல்களை பரிந்துரை செய்யும் சாத்தியமும் உள்ளது.
 
இது தற்போது Gemini Advanced சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதுவும் சில நாடுகளில் மட்டும். 18 வயதுக்கு மேற்பட்ட தனிப்பட்ட பயனர்களுக்கே அனுமதி உண்டு; கல்வி மற்றும் பிஸினஸ் கணக்குகளில் இது செயல்படாது.
 
ஆனால் அதே நேரத்தில் விரைவில் பல Android போன்களிலும் வரவிருப்பதாக  கூறப்படுகிறது. கேமிரா வழியாக பார்த்து, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை சாத்தியமாக்கும் இந்த நவீன AI, எதிர்கால டிஜிட்டல் அனுபவத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என கருதப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!