உலக வங்கிகள் பல அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் டிரில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் சில அணு ஆய்த சோதனைகள் காரணமாக மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும், அதன் மீது சோதனை மேற்கொள்வதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் அணு ஆயுத நிறுவனங்கள் மீது முதலீடு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Don't Bank on the Bomb என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 329 வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட 24 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள 20 வெவ்வேறு அணு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் மூதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.