Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் பற்றி தெரியுமா??

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் பற்றி தெரியுமா??
, வியாழன், 8 ஜூன் 2017 (10:32 IST)
பலர் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம் அதிக லாபம் பெற இயலும் என்பதே காரணமே. ஆனால் இதில் நிறைய ரிஸ்க் இல்லாமலும் இல்லை. 


 
 
இந்தியாவில் பலரும் ஐந்து வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்கின்றனர். அவை..
 
# ஈக்விட்டி ஃபண்ட் (Equity Fund)
 
# டெப்ட் ஃபண்ட் (Debt Fund)
 
# பேலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund)
 
# பணச்சந்தை முதலீடுகள் (Money market investments)
 
# பத்திர முதலீடுகள் (Bond investments)
 
ஈக்விட்டி ஃபண்ட்:
 
இந்த வகை ஃபண்டுகள் முதலீடுகள் பெரும் பணத்தில் பெரும் பகுதியை பங்குகளாக முதலீடு செய்யப்படுகின்றன. 
 
இவற்றில் சந்தை அபாயங்கள் அதிகம். அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு இது உகந்தது.
 
டெப்ட் ஃபண்ட்:
 
இந்த வகை முதலீட்டில் பெரும்பாலான முதலீட்டு பணம் நிறுவனக்கடன், வங்கிகள் வழங்கும் கடன், பரிசுப் பொருட்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் உள்ளிட்ட கடன் திட்டங்களில் மூலம் முதலீடு செய்யப்படும். 
 
சந்தை அபாயங்களை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது சரியான முதலீடு. இதில் வருமானம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
 
பேலன்ஸ்டு ஃபண்ட்:
 
இந்த வகையில் முதலீட்டு பணமானது பங்குகள் மற்றும் கடன்கள் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யப்படுகின்றன. 
 
சந்தை நிலைகளுக்கேற்ப அவ்வப்போது முதலீட்டு உக்திகளை மாற்றுவது இதில் பொதுவானது. 
 
பணச்சந்தை முதலீடுகள்:
 
பணச்சந்தை முதலீடுகள் எளிதில் மாற்றத்தக்க முதலீடுகள். இவை பெரும்பாலும் குறுகிய கால முதலீடுகளாக இருக்கும்.
 
பத்திர முதலீடுகள்:
 
இது பாதுகாப்பான முதலீடு. பெரும்பாலும் இவை அரசு கடன் பத்திர முதலீடுகளாக இருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டம்!