சூரிய மண்டலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் விண் பொருள் என அறியப்பட்டுள்ள ஓமுவாமுவா என்பது வால்மீன் , சிறுகோள் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழக வானிலையாளர்கள் இது ஒரு நைட்ரஜன் பனிப்பாறை என தெரிவித்துள்ளனர். மேலும் இது மிகவும் அறிதான ஒன்று எனவும் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது 900 அடி நீளமுள்ளது குறிப்பிடத்தக்கது.