Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரிய கிரகணம் முடிஞ்சா, கொரோனாவும் அழிஞ்சிடும்: சென்னை விஞ்ஞானி

சூரிய கிரகணம் முடிஞ்சா, கொரோனாவும் அழிஞ்சிடும்: சென்னை விஞ்ஞானி
, திங்கள், 15 ஜூன் 2020 (18:58 IST)
கொரோனாவுக்கும் சூரிய கிரகணத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்றும்  ஜூன் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்திற்கு பின் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்றும் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூரிய கிரகணம் நிகழ்ந்த போது சூரிய கிரகணத்தில் இருந்து வெளியான ஆற்றல் காரணமாகப் அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் கிருஷ்ணன் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘கொரோனா வைரஸ் 2019ஆம் டிசம்பரில் தான் தோன்றியது. அதாவது கடந்த டிசம்பர் 26 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்ட பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தம்மை மறு சீரமைத்துக் கொண்டிருப்பதால், அந்த ஆற்றல் காரணமாக பூமியின் மேல் பரப்பில் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம்.
 
எனது ஆய்வு உண்மையாக இருக்குமானால் ஜூன் 21ஆம் தேதி மீண்டும் நிகழும் சூரிய கிரகணத்தின்போது சூரியனிலிருந்து வெளியாகும் ஆற்றல் அந்த கொரோனா வைரசைச் செயலிழக்கச் செய்துவிடும் எனக் கூறியுள்ளார். இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழு ஊரடங்கு பீதியால் கடைகளில் குவியும் பொதுமக்கள்: அதிர்ச்சி தகவல்