சைக்கிள் மோதியதால் மாணவியை கற்பழித்து கொலை செய்த அகதி!!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (16:00 IST)
கடந்த ஆண்டு மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு மரியா என்ற 19 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றாவாளி ஆப்கன் நாட்டை சேர்ந்தவர். அகதியாக ஜெர்மெனியில் வாழ்ந்து வருகிறார்.
 
மாணவியை கற்பழித்த போது இவரது பல் ஒன்று உடைந்துள்ளது. இதை வைத்து போலீஸார் குற்றவாளியின் வயதை கணித்து கண்டுபிடித்துள்ளனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது இவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சம்பவ நாளன்று, இந்த நபரும் அவரது நண்பர்களும் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர், அப்போது மரியா தெரியாமல் இவர்கள் மீது தனது சைக்கிளை மோதிவிட்டார். அப்போது மரியா அழகாக காணப்பட்டதால் அவரை கற்பழிக்க முடிவுசெய்துள்ளார். 
 
உடனே மரியாவை கடத்து சென்று கற்பழித்து கொலை செய்துள்ளார். மேலும், மாணவியை கற்பழித்து கொலை செய்ததற்கு மாணவியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.  வழக்கில் மேலும் சில விசாரணைகள் மீதமுள்ளதால், அடுத்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தொடர் சோகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments