ஜெர்மனியில் உள்ள ஆல்வின் என்ற சிறிய கிராமம் ஏலம் மூலம் ரூ.105 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஜெர்மனியில் தனியார் வசம் உள்ள 'ஆல்வின்' என்ற சிறிய கிராமம் ஏலம் மூலம் விற்கப்பட்டது. தலைநகர் பெர்லினில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இக்கிராமத்தில் மிகக்குறைந்த அளவு மக்களே வாழ்ந்து வருகின்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாக இருந்த ஜெர்மனி இணைந்ததால் ஆல்வினில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எனவே இங்கிருந்தவர்கள் மேற்குஜெர்மனி நகரங்களுக்கு சென்றுவிட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததாலும், இருக்கும் வீடுகள் அனைத்தும் சேதமாகி இருப்பதாலும் தனியார் நிறுவனம் இந்த முடிவிற்கு வந்துள்ளது.
ஏலத்தின் தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஆல்வின் கிராமத்தை 85 கோடிக்கு ஏலம் கேட்டார். பின்னர் ஏலம் படிப்படியாக உயர்த்தப்பட்டு முடிவில் அந்த கிராமம் ரூ.105 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.