Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒழுங்கா இழப்பீடை செட்டில் பண்ணுங்க! – பாயும் ஜெர்மனி பதுங்கும் சீனா!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (12:41 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட சீனாவே காரணம் என குற்றம் சாட்டி இழப்பீடு கேட்டுள்ளது ஜெர்மனி.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட நாட்டினை குற்றவாளியாக கருத முடியாது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சீனாவினால் ஜெர்மனி பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 149 பில்லியன் யூரோக்களை இழப்பீடாக கேட்டுள்ளது ஜெர்மனி. இதுகுறித்து ஜெர்மனி வெளியிட்டுள்ள பட்டியலில் சுற்றுலா இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறை இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவைகள் தொடர்பான இழப்புக்கு 1 பில்லியன் யூரோக்களும், தொழில்ரீதியான இழப்புகளுக்கு 50 பில்லியன் யூரோக்களும் என ஒரு பெரும் பட்டியலையே அளித்துள்ளது.

ஜெர்மனியின் இந்த செயலுக்கு பதிலளித்துள்ள சீனா உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநொய்க்கு ஒரு குறிப்பிட்ட நாட்டை குற்றம் சொல்ல முடியாது எனவும், சீனா மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் ஜெர்மனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments