தெலங்கானாவில் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளமே வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது,
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு 50% சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு 75% சம்பளமும் அளிக்கப்படும். மிந்துறை ஊழியர்களுக்கு முழு சம்பளமும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியார்கள், போலீஸார் ஆகியோருக்கு 10% கூடுதல் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படுமா என்பதனை மே 5 ஆம் தேதி ஆலோசித்து தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.