Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குதிரையால் பரிதாபமாக உயிரிழந்த ஜெர்மன் இளவரசர்

Advertiesment
குதிரையால் பரிதாபமாக உயிரிழந்த ஜெர்மன் இளவரசர்
, வெள்ளி, 15 ஜூன் 2018 (14:04 IST)
ஹார்ஸ் ரைடிங்கின் போது குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜார்ஜ், இங்கிலாந்தை சேர்ந்த ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர், ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார்.
 
குதிரை பந்தயத்தில் ஆர்வமுள்ள ஜார்ஜ், சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரது குதிரை ஆக்ரோஷமாக ஓடியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜார்ஜுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. 
 
இதனையடுத்து படுகாயமடைந்த ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது மனைவியும் ஜெர்மன் அரச குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலித்து ஏமாற்றியதால் கோபம் ; கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து : சென்னையில் அதிர்ச்சி