Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனை கொலை செய்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்

Advertiesment
சவுந்திரபாண்டியன் | எழுத்தாளர் சௌந்திரபாண்டியன் | writer soundarapandiyan passed away | Madurai government hospital | cinema writher soundarapandiyan
, திங்கள், 11 ஜூன் 2018 (07:40 IST)
'சீவலப்பேரி பாண்டி' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவரும் பிரபல எழுத்தாளருமான சவுந்திரபாண்டியன் மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்த நிலையில் திடீரென இன்று உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
 
எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான சவுந்திரபாண்டியன் கடந்த மாதம் தனது மகனை சுத்தியால் அடித்து கொலை செய்தார். இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் மதுரையில் சிறையில் அடைக்கபப்ட்டிருந்தார்.
 
இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
webdunia
போதைக்கு அடிமையான மகன் விபின் சொத்து தொடர்பாக தகராறு செய்ததால்  ஆத்திரமுற்ற சவுந்திரபாண்டியன் , மகன் விபினை சுத்தியலால் அடித்து கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடகொரிய அதிபரை அடுத்து சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்