Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகப் பணக்காரர்கள் வரிசையில் பிக்கேட்ஸைப் பின்னுக்கு தள்ளிய கௌதம் அதானி… பின்னணி என்ன?

Advertiesment
உலகப் பணக்காரர்கள் வரிசையில் பிக்கேட்ஸைப் பின்னுக்கு தள்ளிய கௌதம் அதானி… பின்னணி என்ன?
, புதன், 20 ஜூலை 2022 (09:07 IST)
இந்திய பணக்காரரான கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸை முந்தியுள்ளார்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து 12 முறை இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் பில்கேட்ஸ். ஆனால் இப்போது அவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இப்போது தனது அறக்கட்டளைக்கு அதிகளவில் நிதியுதவி அளித்து வருகிறார். பில்கேட்ஸ் தற்போது பில் மற்றும் மெலிண்டா என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து அதற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனால் அவரின் சொத்து மத்தியில் தற்போது குறைந்துள்ளது.

இதனால் இந்தியப் பணக்காரரான கௌதம் அதானி பில்கேட்ஸை முந்தியுள்ளதாக போர்ப்ஸ் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது அதானி உலகப் பணக்காரர்கள் வரிசையில் 4 ஆம் இடத்தில் உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Netflix 1M Lose – மீட்க வருமா மைக்ரோசாப்ட்??