Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வெள்ளி, 30 மே 2025 (15:53 IST)
சில ஆண்டுகளுக்கு முன் வருடத்திற்கு ரூ.1.28 கோடி  சம்பளம் பெற்ற மெட்டாவெர்ஸ் உலகில் பணியாற்றும் சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்த ஷான், இப்போது நியூயார்க் நகரில் சிறிய ஒரு டிரெய்லரில் வசித்து, உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார். 42 வயதுடைய ஷானுக்கு தொழில்நுட்ப துறையில் 20 வருட அனுபவம் உள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென வேலை இழந்தார். அதன்பின் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார்; ஆனால் 10க்கும் குறைவான நேர்காணல் அழைப்புகள் வந்தன, அவற்றில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவு  பாட்டுகள் மூலம் வந்தவை. தொழில்நுட்பத் துறையில் எந்த வேலையும் கிடைக்கவில்லை.  
 
மெட்டாவெர்ஸ் போன்ற பரபரப்பான துறைகளில் பணியாற்றிய ஷான் AI காரணமாக வேலையிழந்துள்ளார்.  AI-க்கு எதிராக அவர் இல்லை,  AI ஒரு சிறந்த தொழில்நுட்பம் என நம்புபவர், ஆனால் அவருக்கே AI எமனாக மாறியுள்ளது.
 
ஷானின் கதை தொழில்நுட்பத் துறையின் ஒரு உண்மையை பிரதிபலிக்கிறது. இவர் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்கள் செலவு குறைப்புக்கான காரணமாக AI மூலம் ஊழியர்களை நீக்கி வருகின்றனர்.
 
ஷானின் கதை சிரமத்தை காட்டுவதோடு, AI வளர்ச்சி சமநிலை இல்லாவிட்டால் அது கோடிக்கணக்கான வாழ்க்கைகளை பாதிக்கக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை என்றும் அமைந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments