Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டாக பிரியும் ஜம்மு - காஷ்மீர்: எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமித் ஷா அறிவிப்பு!

Advertiesment
இரண்டாக பிரியும் ஜம்மு - காஷ்மீர்: எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமித் ஷா அறிவிப்பு!
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:44 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என எதிர்ப்புகளுக்கு மத்தியில் உள்துரை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். 
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலை பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  
 
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
webdunia
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமித் ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307 நீக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 
 
சட்டப்பேரவை கூடய யூனியன் பிரெதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரெதேசமாக லடாக்கும் இருக்கும் என அறிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில அந்தஸ்தை இழந்தது ஜம்மு காஷ்மீர்.. நாடாளுமன்ற சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும்