Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10.66 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

10.66 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (06:54 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 10.66 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 106,676,220 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,326,773  பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 78,374,302  பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 25,829,008 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,611,403 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 474,933 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 17,354,388 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,838,843 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 155,114 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,533,076 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,524,640 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 231,561 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,397,187 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம்: முக ஸ்டாலின்