தாய்லாந்து நாட்டில் உணவு மோசடியி ஈடுபட்ட 2 பேருக்கு தலா 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாங்காங் கோர்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் ஆகும். இங்கு லாம்கேட் கடல் உணவுகளை வழங்கும் ஒரு ஹோட்டல் இயங்கி வந்தது.
இந்த உணவகத்தில் சமைக்கப்பட்ட கடல் உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிட்டு வந்தனர். அப்போது கடை உரிமையாளர் ஒரு உக்தியை கையாண்டார். உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே உணவுக்கான டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.
இப்படி பலபேரிடம் பணம்பெற்றுச் சுமார் ரூ.12 கோடியை கொள்ளையடித்துள்ளது.ஆனால் வாடிக்கையாளரிடம் வாங்கிய பணத்திற்காக உணவைத் தராமல் ஏமாற்றியுள்ளது.
ஏமாற்றம் அடைந்த மக்கள் நீதிமன்றத்தில் மோசடி வழக்குத் தொடுத்தனர். இதில், குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதன்படி அவர்களுக்கு தலா 1446 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாங்காக் கோர்டு தீர்ப்பளித்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதல் தண்டனைபாதியாகக் குறைக்கப்பட்டது. எனவே 723 ஆண்டுகள் சிறைத்தண்டனை. ஆனாலும் அந்த நாட்டுச் சட்டத்தின்படி அவர்கள் தலா 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தாலே போதும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.