Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிடிகொடுக்காத ரஜினி, திமுக பக்கம் சாய்கிறாரா கமல்?

பிடிகொடுக்காத ரஜினி, திமுக பக்கம் சாய்கிறாரா கமல்?
, வெள்ளி, 12 ஜூன் 2020 (16:47 IST)
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கனவில் கலந்த 2017 ஆம் ஆண்டு கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் ஆனால் அவரால் 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை என்பது மட்டுமன்றி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி கட்சியை வளர்க்கலாம் என்ற எண்ணமும் நிறைவேறாது போல் தெரிகிறது. தனது தயாரிப்பில் நடிக்க கூட ரஜினி தயங்கி வருவதால் கட்சியுடன் எப்படி கூட்டணி சேருவார் என்று முடிவு செய்த கமல்ஹாசன் தற்போது திமுக பக்கம் சாய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இதற்கு அச்சாரமாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் காலமான போது முக ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில் பேசிய கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக சில கருத்தை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
வரும் 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் 20 தொகுதிகள் வரை கமலஹாசன் கேட்டு இருப்பதாகவும் குறிப்பாக கொங்கு மண்டலம் உட்பட நகர்ப்பகுதிகளில் அவரது கட்சி போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் வரும் பொதுத் தேர்தலில் திமுகவுடன் கமல் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வரதராஜனின் நண்பர் மரணம்