அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கால் பலியானவர்கள் எண்ணிக்கை 80ஐ தாண்டியுள்ள நிலையில் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் மலைப்பகுதியை ஒட்டிய நகரமான கெர் கவுண்டியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்த நிலையில் திடீரென ஆறு கரைகளை உடைத்துக் கொண்டு நகரத்தில் பாய்ந்தது.
வெறும் முக்கால் மணி நேரத்திற்குள் நகரம் முழுவதையும் ஆட்கொண்ட வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலியானார்கள். ஏராளமானோர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட குவாடலூப் ஆற்றுக் கரையோரமாக பள்ளி சிறுமிகள் 25 பேர் கோடைக்கால முகாம் அமைத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் வரும் என தெரியாமல் இருந்த மக்கள் பலர் வீடுகளை உடைத்துக் கொண்டு திடீரென வெள்ளம் புகுந்ததை வீடியோ எடுத்து ஷேர் செய்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K