Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் இணையும் பின்லாந்து நாடு!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (21:52 IST)
நேட்டோ அமைப்பில்  31 வது  நாடாக பின்லாந்து நாடு இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ அமைப்பாகும். இந்த  நேட்டோ கூட்டமைப்பு தான் தற்போது, உக்ரைன் மீதான ரஷிய போரில், உக்ரைனுக்கு  நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த நேட்டோ கூட்டமைப்பில், ஏற்கனவே பல நாடுகள் இணைந்துள்ள நிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் பின்லாந்து நாடு இணையவுள்ளது.

மேலும், நாளை பின்லாந்து நாடு நேட்டோ கூட்டமைப்பில் இணையவுள்ளதாக அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கூட்டமைப்பில் கடைசி நாடாக துருக்கி இணைந்திருந்த நிலையில் நாளை நேட்டோ அலுவலகத்தில் பின்லாந்து நாட்டின் கொடி ஏற்றப்பட்டவுள்ளது. இந்த  நிகழ்ச்சியில், அந்த நாட்டு அதிபர் செளலி நினிஸ்டோ, பாதுகாப்பு அமைச்சர் கைகொனென், வெளியுறவு அமைச்சர்   ஹாவிஸ்டோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

உக்ரைனுக்கு அதிக ஆதரவளிக்க நேட்டோவை வலியுறுத்துவதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

விரைவில் ஸ்வீடனும் நேட்டோவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

இன்றிரவு 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments