நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும்.இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது.இதனையடுத்து இரு மாதங்களுக்கு பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
இந்த ஆலயம் வரலாற்றுப் பெருமை கொண்டதாகும். கடந்த 1,345ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டி எழுப்பப்பட்ட உலகப்புகழ்பெற்ற தேவாலயம்தான் நாட்ரே தேவாலயம்.
சமீபத்தில் இந்த தேவாலயத்தில் நடைபெற்ற புனரமைப்பு வேலை செய்கையில் திடீரென்று இங்கு தீவிபத்துக்குள்ளானது.
இதனால் அங்குள்ள பக்தர்கள்,மற்றும் கிருஸ்தவர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் இந்த தேவாலயம் 5 ஆண்டுகளுக்குள் பழைய மாதிரியே சீரமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த தேவாலயத்தின் வருடாந்திர திருபலியை முன்னிட்டு, முதல் திருப்பலி தற்காலிகமாக அந்த ஆலயத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய ஆலயத்தில் நடந்தது.
இந்த திருப்பலி ஆராதனையின் போது பலத்த பாதுகாப்புடன் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்டவர்கள் தலையில் பாதுகாப்புக் கவசமாக ஒரு துணியை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.