Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் Facebook

Advertiesment
பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும்  Facebook
, புதன், 13 மே 2020 (19:03 IST)
பேஸ்புக் நிறுவனம்  அதன் உள்ளடங்கங்களை  தணிக்கை செய்து வெளியிடும் மதிப்பீட்டாளர்கள் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சுமார் ரூ.392 கோடி ரூபாய் வழங்குவதாகவும் , அவர்களுக்குத் தேவையன மன நல மசோதா வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உலகில் அதிகளவிலான பயனாளர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், அதன் அதன் வலைதளத்தில், அதிக நச்சுத் தன்மை கொண்ட அதிர்ச்சியூட்டும்  தன்மை கொண்ட தகவல்களைப் படித்து தணிக்கை செய்து  வெளியிட வேண்டி பல பணியாளர்களைப் பணிமயர்த்தியுள்ளது.

இந்நிலையில், இவர்கள் அதிக வக்கிரத் தன்மையுள்ள படங்கள், கொலை, வன்முறை போன்ற செய்திகளையும், படங்களையும் அடிக்கடி பார்க்கும்போது மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது.  எனவே, இந்தப் பணியாளர்களை மனநலத்தைக் காக்கும் பொருட்டு, பேஸ்புக் நிறுவனம்  11,250 பேருக்கு மொத்தம்  392 கோடி ரூபாய் இழப்பீடாக  வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்மூலம் தற்போதைய பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள் ஆகியோருக்கு தலா ரூ. 75 ரூபாய் முதல் ரூ நாலரை லட்சம் வரை வழங்கப்படும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்: முதல்வர் பழனிச்சாமி பேச்சு