உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார மந்த நிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக மைக்ரோசாப்ட் கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா வேலை நீக்கம் செய்தது.
இந்த நிலையில் தற்போது 13 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.