ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஏற்கனவே 11 ஆயிரம் பேர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதன் தாய் நிறுவனமான மெட்டாவில் 7000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உலகெங்கும் பொருளாதார மந்த நிலை உள்பட பல்வேறு காரணங்களால் முன்னணி நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கூகுள் அமேசான் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உள்ளது என்பதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஒரு வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடப்பட்டது.
ஏற்கனவே பல நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்து வரும் நிலையில் வேலை நீக்க நடவடிக்கையும் சேர்ந்து கொண்டதால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் 7000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.