Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்த வீட்டில் திருடிய சிறுவனுக்கு தாய் கொடுத்த தண்டனை - அதிர்ச்சி வீடியோ

Advertiesment
சொந்த வீட்டில் திருடிய சிறுவனுக்கு தாய் கொடுத்த தண்டனை - அதிர்ச்சி வீடியோ
, திங்கள், 22 ஜனவரி 2018 (13:31 IST)
வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சீனா ஷயோடாங் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் சிறுவன் வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை திருடி செலவழித்து விட்டான். இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சரியான பதிலை அவன் கூறவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவனின் தாய், தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அலறியுள்ளான்.
 
இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
 
தனது கணவரின் ஒரு மாத சம்பளத்தை தனது மகன் திருடி செலவு செய்துவிட்டதால், ஆத்திரத்தில் அப்படி செய்ததாக போலீசாரின் விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார். எனவே, அவருக்கு, அவரின் மகனுக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் என்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி 24ல் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி