Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொழில் போட்டியில் தந்தையை கொலை செய்த மகன் மற்றும் அவரது மனைவி கைது

Advertiesment
தொழில் போட்டியில் தந்தையை கொலை செய்த மகன் மற்றும் அவரது மனைவி கைது
, சனி, 20 ஜனவரி 2018 (09:43 IST)
கடலூரில் தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகனும், மருமகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி தாமரைக்குளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மகன் பாலமுருகன் (42). இவருடைய மனைவி தேன்மொழி (37). பன்னீர்செல்வம்,பாலமுருகன் இருவரும் புவனகிரி கடைவீதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தனர்.  இந்தக் கடையை நடத்துவதில் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்ற பாலமுருகன் தனது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே ஆத்திரமடைந்த பாலமுருகன் தனது தந்தையை கொலை செய்ய முடிவு செய்து அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டபோது, தேன்மொழி  பன்னீர்செல்வத்தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
விஷமயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பாலமுருகன், தேன்மொழி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தந்தையை, மகனும் மருமகளும் சேர்ந்து கத்தியால் குத்தி  கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மரணம் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்; ஓ.பன்னீர் செல்வம்