கோவிஷீல்டை ஏத்துப்பீங்களா? மாட்டீங்களா? எச்சரித்த இந்தியா! – ஏற்றுக்கொண்ட நாடுகள்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (12:04 IST)
இந்தியாவில் போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை அனுமதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி பட்டியலில் இணைக்க இந்தியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கோவிஷீல்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் மக்களுக்கு பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணிக்க பைசர், ஸ்புட்னிக் உள்ளிட்ட சில தடுப்பூசி வகைகளில் ஏதாவது ஒன்றை செலுத்தி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகள் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டை இணைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்பந்தபட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு பயணிக்க அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments