Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (08:16 IST)
டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்;  அந்த நகரத்தைத் தாக்கப் போகிறோம் என இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், "டெக்ரானிலிருந்து அனைவரும் வெளியேறுங்கள்" என எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடத்தை ஈரான் தாக்கியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இரு நாடுகளின் ராணுவமும் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி வருவதால், யுத்தம் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. எனவே, டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என்றும் டிரம்ப் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளார். மேலும், "நான் கையெழுத்திட சொன்ன அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். மனித உயிர்களை மிகவும் இலகுவாக நினைக்க கூடாது. ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
 
டெஹ்ரானை குறி வைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments