Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்: நாளை தீர்ப்பு

Advertiesment
91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்: நாளை தீர்ப்பு
, வியாழன், 2 ஜூன் 2016 (18:05 IST)
இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சார்ட் ஹக்லே என்ற ஆங்கில ஆசிரியர் 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது.


 
 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியுள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான ரிச்சார்ட் ஹக்லே. குழந்தைகள் மீதான பாலியல் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் இவர்.
 
அந்த கான்வெண்டில் படிக்கும் கிறிஸ்தவ ஏழை குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 12 வயதுக்கும் கீழ் உள்ள மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவர்.
 
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற ரிச்சார்ட் ஹக்லே 2014-ஆம் ஆண்டு கேட்விக் விமான நிலையத்தில் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
 
இங்கிலந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ரிச்சார்ட் ஹக்லே மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாலும், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும் ஆசிரியர் ரிச்சார்ட் ஹக்லேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஷிங் மிஷினில் தலையை விட்ட சீன மனிதர்